×

ஹெட்செட்டில் பேசியபடி வாகனங்களில் அதிவேக பயணம்

ஆண்டிபட்டி, செப். 3: மாவட்டத்தில் ப்ளூடூத் மற்றும் ஹெட்செட் அணிந்து வாகனங்கள் ஓட்டுவது அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் வகையில், போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்டத்தில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எவ்வளவு வாகனங்கள் பெருக்கம் ஏற்படுகிறதோ, அவ்வளவு விதி மீறல்களும் அதிகரிக்கின்றன. வாகன சோதனை நடைபெற்று அபராதம் போலீசார் விதித்து வருகின்றனர். இருப்பினும் விதிமீறல் குறைந்த பாடில்லை. சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக புதுப்புது விதங்களில் விதி மீறல்கள் நடைபெற்று வருகின்றன. வாகன ஓட்டிகள் அந்த விதத்தில் தற்போது ப்ளூடூத் மற்றும் ஹெட்செட் அணிந்து பேசியபடியும், சினிமா பாடல்களை கேட்டுக் கொண்டும் வாகனங்கள் இயக்குவது அதிகரித்துள்ளது.

இவ்வாறு ஹெட்செட் அணிந்து கொண்டு வாகனத்தை இயக்குவதால் கவன சிதறல் ஏற்பட்டு, அதனால் எதிரெ வரும் வாகனத்துடன் மோதி விபத்து ஏற்படுகிறது. மேலும் வாகனம் ஓட்டும்போது காதுகளில் ஹெட்செட் அணிந்து கொண்டு பேசுவது. சினிமா பாடல்களை கேட்பதால் பின்னால் வரும் வாகனங்கள் எழுப்பும் ஒலி கேட்பதில்லை. இதன் காரணமாகவும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இவ்வகையான விபத்துகளில் பலரும் உயிரிழப்பது, கை, கால் உள்ளிட்ட உறுப்புகளை இழக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடக்கின்றன. இதை கருத்தில் கொண்டு இத்தகைய போக்குவரத்து விதிமீறல்களை மனதில் வைத்து அபராதம் விதிக்க வேண்டும், என்றனர்.

போலீசார் கூறுகையில், ‘‘ப்ளூடூத் ஹெட்செட் அணிந்து கொண்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு தனியாக அபராதம் விதிக்க முடிவதில்லை. மொபைல் பேசியபடி வாகனம் இயக்குவதற்கான அபராதமே வசூலிக்கப்படுகிறது. தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் அதை ஏற்றுக் கொள்வது அவசியமானது என்றாலும், அந்த தொழில் நுட்பத்தால் தொடர் உயிரிழப்புகள் ஏற்படுவதையும் தடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மொபைல் போன் பேசியபடி வாகனங்கள் இயக்குவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஹெட்செட் அணிந்து கொண்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க பிரத்யேக சட்டம் இல்லை.

அதனால் அவர்களுக்கும் அதே சட்டத்தின் கீழ் தான் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் ஹெல்மெட்டுக்குள் ப்ளூடூத் இருப்பதால் அவர்களை கண்டறிவது மிகவும் சிரமமாக உள்ளது. கார்களில் ப்ளூடூத் ஹெட்செட் அணிந்து கொண்டு செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் நிச்சயமாக போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும்.’’ என்றனர்.து நல்லது. நல்ல தூக்கமும், உரிய உணவு பழக்கமுமே மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்தும்’’ என்றனர்.

Tags : Andipatti ,
× RELATED ஓய்வூதியர் தின விழா