தக்கலை அருகே பெண்ணிடம் 4பவுன் செயின் பறிப்பு

தக்கலை, டிச. 16: சுவாமியார்மடத்தை  அடுத்த புலிப்பனம் பகுதியை ேசர்ந்தவர் சிந்து(51). இவர் அப்பகுதி ரேஷன்கடை அருகில் டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று பைக்கில் வந்த 2 வாலிபர்கள் சிகரெட் கேட்டுள்ளனர். சிந்து திரும்பிய வேளையில் திடீரென அவர் கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினை பறித்து கொண்டு அந்த வாலிபர்கள் மாயமாக மறைந்தனர். சம்பவம் குறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார்  வழக்குப்பதிவு  செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>