சேலம், செப்.3: சேலம் சாமிநாதபுரத்தை சேர்ந்தவர் தமிழரசன் (43). பாஜ பிரமுகர். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். இவருக்கு 10க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கிறது. மேலும் ெகாத்தனாராகவும் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் 3ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமியிடம் அன்பாக பேசி, மிட்டாய் வாங்கி சாப்பிடு என 20 ரூபாயை கொடுத்து கட்டிடத்திற்கு அழைத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அச்சிறுமி சத்தம் போட்டு அழவே, அவரது உறவினர்கள் ஓடி வந்தனர். அதற்குள் தமிழரசன் தப்பி ஓடிவிட்டார். பெற்றோர் புகாரின்படி சூரமங்கலம் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து தமிழரசனை கைது செய்தனர்.
