ஆஞ்சநேயர் கோயிலில் சுதர்சன ஹோமம் மின் பராமரிப்பு பணிக்காக இன்று குடிநீர் சப்ளை நிறுத்தம்

திருச்சி, டிச.16: திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட, ரங்கம்-மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர்சேகரிப்பு கிணறு எண் 1,2,3 தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர்சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ரங்கம் துணை மின் நிலையத்தில் மின்வாரியத்தால் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (16ம் தேதி) காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் ரங்கம் பகுதி முழுவதும் மற்றும் ரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட சஞ்சீவிநகர், தேவதானம், அரியமங்கலம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளான விறகுபேட்டை, மகாலட்சுமி நகர், நேருஜிநகர், அரியமங்கலம் உக்கடை, அரியமங்கலம் கிராமம், ஜெகநாதபுரம், மலையப்பநகர், ரயில்நகர், செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம், பொன்மலை கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளான முன்னாள் ராணுவத்தினர் காலனி, விவேகானந்தநகர், ஜே.கே.நகர், மேலகல்கண்டார்கோட்டை, பொன்னேரிபுரம், கல்லுக்குழி, பொன்மலைப்பட்டி, மத்திய சிறைச்சாலை, சுப்ரமணியபுரம், விமான நிலையப்பகுதி, காமராஜ்நகர், செம்பட்டு, காஜாநகர், காஜாமலை, கே.சாத்தனூர், கே.கே.நகர், தென்றல்நகர், ஆனந்த்நகர், சத்யவானி முத்துநகர், அய்யப்பநகர் மற்றும் கோஅபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட உறையூர், மங்களாநகர், பாத்திமாநகர், சிவாநகர், ரெயின்போ நகர், செல்வாநகர், ஆனந்தம்நகர், பாரதிநகர், புத்தூர் பகுதி, எடமலைபட்டிப்புதூர், அன்புநகர், கிருஷ்ணமூர்த்திநகர், தொண்டைமான்நகர், கிராப்பட்டி போன்ற பகுதிகளில் இன்று ஒருநாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது. நாளை வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். இதனால், பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருக்கிறார்.

Related Stories:

>