×

அலுவலர்களுக்கு உத்தரவு திருவாரூர் கமலாலய குளத்தின் மதில் சுவர் கம்பிகள் சேதம்

திருவாரூர், டிச.16: திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக தியாகராஜ சுவாமி கோயில் இருந்து வருகிறது. இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசியக் கண்டத்திலேயே மிகப்பெரிய தேராகும். இந்த தேரோட்டத்திற்கு பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் இருந்து வரும் கமலாலய குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். 5 வேலி பரப்பளவை கொண்ட இக்குளத்தில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு கருதியும், தற்கொலை சம்பவங்களை தடுக்கும் வகையிலும் குளத்தின் நான்கு புறமும் மதில் சுவர் மீது இரும்பு கம்பி தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுபோன்று வைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளில் குளத்தின் வடகரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரும்பு கம்பிகள் சேதமடைந்து சாலையில் செல்வோர் மீது விழும் அபாயம் உள்ளது. எனவே கோயில் நிர்வாகம் இதனை தடுக்கும் வகையில் உடனே தடுப்புகளை சீரமைத்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : pond ,Thiruvarur Kamalalaya ,
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்