×

பூசாரிகள் சங்கம் வலியுறுத்தல் குடவாசல் ஒன்றியத்தில் அடிப்படை வசதி கேட்டு நூதன போராட்டம்

திருவாரூர், டிச.16: திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் முழுவதும் இருந்து வரும் கிராம சாலைகளை சீரமைத்து தர வேண்டும், குறிப்பாக திருப்பாம்புரத்திலிருந்து கோவில்பட்டி செல்லும் சாலை, மருதவாஞ்சேரியிலிருந்து ஒன்பதுபுளி செல்லும் சாலை ஆகிய சாலைகளை சீரமைக்க வேண்டும். அதம்பார் இ பி காலனியில் மழை காலங்களில் ஆற்றுநீர் குடியிருப்பு பகுதியில் புகுவதை தடுக்கும் வகையில் ஆற்றங்கரையில் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும், எரவாஞ்சேரி கடை தெருவில் இருந்து வரும் பொது கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், ஒன்றியம் முழுவதும் இருந்து வரும் தொகுப்பு வீடுகளை புதிதாக கட்டித்தர வேண்டும்.

குறிப்பாக திருவிழிமழலை, கூந்தலூர், அதம்பார் போன்ற ஊராட்சிகளில் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் இடியும் தருவாயில் இருந்து வருவதால் அதற்கு பதிலாக புதிதாக தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும், ஒன்றியம் முழுவதும் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடவாசல் தாலுகா அலுவலகம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்ணில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு ஒன்றிய செயலாளர் தீனதயாளன் தலைமையிலும், தெற்கு ஒன்றிய செயலாளர் பகத்சிங் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் முகம்மது சலாவுதீன் மற்றும் பொறுப்பாளர்கள் குமரேசன், விஜய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Priests Association ,facilities ,
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...