×

பொதுமக்களுக்கு அழைப்பு மனித சங்கிலி போராட்டம் நடத்த முயன்ற 70 பேர் கைது

தஞ்சை, டிச. 16: தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வெளியிட கோரி தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் காமராஜ் தலைமையில் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் போலீசார் இப்போராட்டத்துக்கு அனுமதி மறுத்தனர். இதனால் தஞ்சை- புதுக்கோட்டை சாலை, வல்லம் சாலை ரவுண்டானா ஆகிய இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடத்த வந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினரை தடுத்து நிறுத்தினர். அப்போது 7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் அரசாணையை வெளியிட வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதையடுத்து 70 பேரை போலீசார் கைது செய்தனர்.


செமஸ்டர் இறுதி தேர்வுகளுக்காக
டிசிஎஸ்.யுடன் கைகோர்க்கும் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம்

தஞ்சை, டிச. 16: கண்காணிப்பு முறையில் நடத்தப்படும் செமஸ்டர் இறுதி தேர்வுகளுக்காக சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம். டிசிஎஸ்யுடன் கைகோர்க்கிறது. தற்போது நிறைவடைந்துள்ள 2020-21ம் ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வை
கண்காணிப்பு முறையில் தொலைவு நிலையில் நடத்த சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் கல்வி அலுவல்குழு அனுமதி வழங்கியுள்ளது. இக்குழு இணையவழி தேர்வு முறையின் நன்மை, தீமைகளை ஆராய்ந்தது. பின்னர் நேரடி தேர்வு மற்றும் இணையவழி தேர்வு ஆகியவற்றின் அம்சங்கள் இணைந்த தேர்வு முறை மாணவர்களின் நேர்மைக்கு சமரசம் செய்யாத வகையில் அமையும் என்றும் அதேநேரம் மாணவர்கள் தொலைதூரத்தில் இருந்து பல்கலைக்கழக வளாகத்துக்கு வர தேவைப்படாது என்றும் தெரிவித்தது.

எனவே சாஸ்த்ரா. டிசிஎஸ்சின் மையங்களுடன் இணைந்து இம்முறையிலான தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. நாடெங்கிலும் 130 மாவட்டங்களில் உள்ள இம்மையங்கள் மூலம் 10,000க்கும் அதிகமான மாணவர்களுக்கு 50,000க்கும் மேற்பட்ட தேர்வுகள் நடத்தப்படும். மாணவர்கள் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள மையங்களை தேர்வு செய்து அட்டவணைப்படி தேர்வுகளை எழுதலாம். வினாத்தாள்கள் பாதுகாப்பான வகையில் இணையவழி மூலம் குறித்த நேரத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும். மாணவர்கள் இம்மையங்களில் வழங்கப்படும் விடைத்தாள்களில் தேர்வுகளை எழுதி ஒப்படைக்க வேண்டும். பின்னர் அவை பல்கலைக்கழகத்துக்கு திருத்துவதற்காக அனுப்பி வைக்கப்படும். இந்த பொது முடக்க காலத்தில் டிசிஎஸ்யுடன் ஒரு பல்கலைக்கழகம் இணைவது நாட்டிலேயே முதல்முறையாகும். இம்மையங்கள் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்கு இக்கல்வியாண்டு இறுதியில் பல்கலைக்கழக வளாகத்திலயே நேரடி தேர்வுகள் நடத்தப்படும் என்று சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.வைத்தியசுப்பிரமணியம் தெரிவித்தார்.

Tags : human chain protest ,
× RELATED ராமேஸ்வரம், பாம்பனில் கடலில் இறங்கி...