×

ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை கீரனூர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம்

புதுக்கோட்டை,டிச.16: கீரனூர் பகுதியில் தொடர்ந்து அடிக்கடி நடக்கும் திருட்டு சம்பவங்களில் திருடர்களை கைது செய்யாமல் போலீசார் மெத்தனம் காட்டுவதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். விரைந்து திருடர்களை கைது செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள எட்டு பேரூராட்சிகளில் ஒன்றாக கீரனூர் பேரூராட்சி உள்ளது. மேலும் திருச்சி-புதுக்கோட்டையின் மைய பகுதியாக உள்ளது கீரனூர். இங்கு கோர்ட், கருவூலம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் கீரனூர் டிஎஸ்பி அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கீரனூரில் ஒரு சட்டம் ஒழுங்கு காவல் நிலையமும் உள்ளது. இந்த காவல் நிலைய கட்டுப்பாட்டில் கீரனூர் நகர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளும் வருகிறது. இதுமட்டுமில்லாமல் புதுக்கோட்டை சாலையில் குளத்தூரில் இருந்து நார்த்தாமலை வரையும் திருச்சி சாலையில் பள்ளத்துப்பட்டி, களம்மாவூர் நல்லூர் வரை என பல வருவாய் கிராமங்களும் இந்த கீரனூர் காவல் நிலைய கட்டுப்பாட்டில் தான் வருகிறது. இந்த கீரனூர் காவல் நிலையம் புதுக்கோட்டை மாவட்டத்தில் முக்கியமான சட்டம் ஒழுங்கு காவல்நிலையமாக திகழ்கிறது.

இந்நிலையில் இந்த காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக கடந்த 10ம் தேதி (வியாழன்) அன்று தொடையூரை சேர்ந்த கருப்பையா அருவடைய மனைவி ஆகிய இருவரும் பைக்கில் வந்தபோது வழிமறித்த மர்ம நபர்கள் கருப்பையா மனைவி மாரிக்கன்னுவின் 12 பவுன் நகைகளை பறித்து சென்றனர். அப்போது இந்த சம்பவம் வெள்ளனூர் காவல் நிலையத்திற்கு தள்ளிவிட முயற்சித்து பின்னர் மேல் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் கீரனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் நடந்த இரண்டு நாட்கள் முடிவடைவதற்குள் கல்குமியல்பட்டியில் பட்ட பகலில் காவலாளியின் வீட்டை உடைத்து அதில் இருந்த 6 பவுன் நகையை திருடி சென்றனர். இதுபோல் கடந்த மாதத்தில் சில திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது. இப்படி திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் ஒரு சம்பவத்தில் கூட திருட்டு ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் பிடிக்கவில்லை. இதனால் அந்த பகுதியில் மக்கள் தனியாக செல்ல அச்சப்படுகிறன்றனர். குறிப்பாக பெண்கள் தனியாக வாகனத்தில் செல்லக்கூட அச்சப்படும் நிலை ஏற்பபட்டுள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : theft ,area ,Keeranur ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...