×

எடப்பாடிக்கு புதிய நெருக்கடி: சசிகலா, ஓ.பி.எஸ்.ஐ சேர்க்க செங்கோட்டையன் வலியுறுத்தல்?

சென்னை: வரும் 5ம் தேதி மனம் திறக்கும் செங்கோட்டையன் ஒருங்கிணைந்த அதிமுகவை வலியுறுத்துவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பழனிசாமிக்கு விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில் ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை என குற்றம் சாட்டினார் செங்கோட்டையன். பிப்ரவரியில் நடந்த பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை என செங்கோட்டையன் குற்றம் சாட்டினார். எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லி சென்று வந்த பிறகு செங்கோட்டையன் அமைதி காத்து வந்தார்

மீண்டும் அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ள செங்கோட்டையன் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கோட்டையன் போர்க்கொடியால் அதிமுகவில் எடப்பாடிக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கோபிச்செட்டிபாளையம் அதிமுக அலுவலகத்தில் ஆதரவாளர்களுடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். செங்கோட்டையன் நடத்தும் ஆலோசனையில் பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ.பண்ணாரியும் பங்கேற்றுள்ளார். 5ம் தேதி மனம் திறந்து பேசப் போவதாக அறிவித்துள்ள செங்கோட்டையன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துவதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வரும் 5ம் தேதி மனம் திறக்கும் செங்கோட்டையன் ஒருங்கிணைந்த அதிமுகவை வலியுறுத்துவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்த செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளார்.

Tags : Etapadadi ,Sasicala ,O. ,Chennai ,Senkottaian ,Farmers' Appreciation Ceremony ,Palanisami ,MGR ,
× RELATED இந்தியாவிலேயே அதிகபட்சமாக...