×

அவினாசி கவுண்டம்பாளையம் மாகாளியம்மன் கோயிலில் இன்று பொங்கல் விழா

திருப்பூர், டிச.16: திருப்பூர் அடுத்த அவினாசிகவுண்டம்பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மார்கழி மாதம் பொங்கல் விழா இன்று மார்கழி பூஜையுடன் தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு பூச்சாட்டு விழாவும், 20ம் தேதி இரவு 10 மணிக்கு கருப்பராயன் பொட்டுசாமி பொங்கல் பூஜை, 21ம் தேதி மாலை 6 மணிக்கு விநாயகர் பொங்கல் பூஜை, 23ம் தேதி மாலை 3 மணிக்கு அவிநாசி கோயிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வர செல்லுதல், 29ம் தேதி இரவு 9 மணிக்கு கங்கையில் இருந்து அம்மன் அழைத்து வருதல் (கும்பம் விடுதல்)  உள்பட தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாவிளக்கு பூஜை மற்றும் பொங்கல் விழா வரும் 30ம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. 1ம் தேதி மாலை 7 மணிக்கு அபிஷேக, அலங்கார ஆராதனை பூஜையுடன் பொங்கல் விழா நிறைவடைகிறது.

Tags : festival ,Avinashi Countampalayam Mahaliamman Temple ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...