×

நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை அனைத்து கோயில்களிலும் பரிகார பூஜை நடத்த அனுமதிக்க வேண்டும்

நாகை,டிச.16: தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பரிகார பூஜை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தேவபக்தர்கள் சங்கமம் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். நாகையில் தேசபக்தர்கள் சங்கமம் அமைப்பின் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பிரதீப் தலைமை வகித்தார். தேவூர் தேவ துர்க்கை அம்மன்பீடத்தின் ஸ்தாபகர் விஜயேந்திர சுவாமிகள் சுரேஷ், பரவை சோமசுந்தரம், மகாலிங்கம், வேளை ராஜேந்திரன், குமாரவேலு, செந்தில்குமார், சிங்கார வடிவேலன் ஆகிய இந்து இயக்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.

தேசபக்தர்கள் சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரவடிவேலன் பேசினார். தமிழகம் முழுவதும் இந்து ஆன்மிக பூமியாக மலர்ந்து எழச்செய்து இந்து பண்பாட்டு, கலை, கலாச்சாரத்தை கெடுத்து பொய் பிரசாரம் செய்யும் இந்து மத எதிர்ப்பு பிரசார சக்திகளை தமிழகத்தை விட்டு விரட்டியடிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களையும் பக்தர்கள் முழுமையாக வழிபடுவதற்கும், அர்ச்சனைகள், பரிகார பூஜைகள் செய்வதற்கும் உடனடியாக திறக்க வேண்டும்.
கோயில் குருக்கள், அர்ச்சகர்கள், கோயில் சிப்பந்திகள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவர்களுக்கு உதவி தொகை வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் வலியுறுத்துவது.

தமிழக சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் இந்து மதத்தை, இந்து மத கலாச்சாரத்தை, இந்து மத கடவுள்களை, இந்து இதிகாச புராணங்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் காட்சிகள் வசனங்கள் இருப்பின் அதற்கு தேசபக்தர்கள் சங்கத்தின் சார்பாக கடுமையான எதிர்ப்புகளை தெரிவிப்பது, இந்து மதத்தை இந்து மத கலாச்சாரத்தை இந்து மத கடவுள்களை இந்து இதிகாச புராணங்களை கொச்சைப்படுத்தி கேவலப்படுத்தி காட்சிகள் வசனங்கள் வைப்பவர்களுக்கு மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வேண்டுவது. தமிழகம் முழுவதும் இந்து வாக்கு வங்கி அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நீதிபதி நன்றி கூறினார்.

Tags : administration ,Parikara Puja ,temples ,
× RELATED கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு...