×

பாராளுமன்றத்தை கூட்டி விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களை திரும்ப பெற வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

நாகை,டிச.16: பாராளுமன்றத்தை கூட்டி விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களையும் உடனே திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி விவசாய பிரிவு முன்னாள் மாநில தலைவர் மன்னை மதியழகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: இந்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று டில்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு அளித்து நாட்டின் பல பகுதிகளில் அனைத்து விவசாயிகளும் போராட்டங்களை தொடங்கியுள்ளனர்.

இதனால் உணவு பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்திய அரசு உடனே அவசர கால நடவடிக்கையாக பாராளுமன்றத்தை கூட்டி விவாதம் செய்து விவசாயிகளை பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும். ஆதார விலையை சட்ட வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும். மேலும் விலை நிர்ணயம் செய்யும் உரிமையை உற்பத்தி திறன் கொண்ட விவசாயிகள் அடங்கிய விலை நிர்ணய குழுவை ஏற்படுத்த வேண்டும். உலக பொருளாதார மந்தம் ஏற்பட்ட போதும் கூட நமது நாட்டில் பொருளாதார மந்தம் ஏற்படாமல் இந்த விவசாயிகள் பாதுகாத்தனர். எனவே டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி போராடும் விவசாயிகளுக்கு இடைகால நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : Parliament ,Congress ,
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...