×

ராயனூர் செல்லாண்டிபாளையம் சாலை விரிவுபடுத்தப்படுமா?

கரூர், டிச. 16: கரூர் ராயனூர் செல்லாண்டிபாளையம் சாலை விரிவுபடுத்தப்படுமா? என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூரில் இருந்து செல்லாண்டிபாளையம், சுக்காலியூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலை ராயனூர் நான்கு ரோடு அருகில் இருந்து செல்கிறது. குறிப்பிட்ட தூரம் சென்றதும் இந்த சாலை குறுகலாக உள்ளதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், சாலையை விரிவுபடுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வரும் இந்த ராயனுர் செல்லாண்டிபாளையம் சாலையை விரிவுபடுத்த தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Rayanoor Cellandipalayam Road ,
× RELATED ராயனூர்- செல்லாண்டிபாளையம் சாலையை...