×

மிலாடி நபியையொட்டி மதுக்கடைகள் மூடல்

தர்மபுரி, செப்.2: தர்மபுரி மாவட்டத்தில் மிலாடி நபியையொட்டி, மதுக்கடைகளை மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தர்மபுரி மாவட்டத்தில், வரும் 5ம்தேதி மிலாடி நபி அன்று, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள், முன்னாள் படைவீரர் மது விற்பனை கூடம் என அனைத்தும் முடப்படுகிறது.

வரும் 4ம்தேதி இரவு 10 மணி முதல், வரும் 6ம்தேதி காலை 12 மணி வரை மதுபானங்கள் விற்பனை இன்றி மூடி வைக்க உத்தரவிடப்படுகிறது. மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ, கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Miladi Nabiaioti ,Dharmapuri ,Dharmapuri district ,Collector ,Sathees ,Miladi Nabi ,Tamil Nadu State Vanipak Corporation ,
× RELATED ஓய்வூதியர் தின விழா