×

கமுதி அருகே மகளிர் உரிமைத் தொகை கேட்டு 361 பேர் மனு

கமுதி, செப்.2: கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் முஷ்டகுறிச்சி, முதல்நாடு, கே.நெடுங்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. முகாமிற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வி தலைமை தாங்கினார். வட்டாட்சியர்கள் ராம், சேதுராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன், திமுக மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் மண்டல துணை வட்டாட்சியர்கள் வெங்கடேஷ்வரன், வேலவன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திக், வட்ட வழங்கல் அலுவலர் விஜயா, வருவாய் ஆய்வாளர்கள் பூரணிமா, சதீஸ்குமார், கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முகாமில் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்ப மனு மற்றும் வருவாய்துறை, ஆதிதிராவிடர் நலன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில், விவசாயத்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, தொழிலாளர் நலத்துறை, சுகாதாரத் துறை, தோட்டக்கலை துறை, சமூக நலத்துறை உட்பட பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட மொத்தம் மனுக்கள் 361 பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

Tags : Kamudi ,Stalin ,Mudhalanadu ,Mushtakurichi ,K.Nedunkulam ,District ,Adi Dravidian ,Tribal Welfare Officer ,Selvi… ,
× RELATED ஓய்வூதியர் தின விழா