×

யானை தாக்கி இறந்தவர்கள் இறுதி சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

பந்தலூர், டிச. 16: பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு தேயிலைத்தோட்டம் பகுதியை சேர்ந்த தி.மு.க. கூடலூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தராஜ் மற்றும் அவரது மகன் பிரசாந்த் ஆகியோரை காட்டு யானை தாக்கி கொன்றது. உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் தி.மு.க.வினர் நேற்று முன்தினம் சடலத்தை வாங்க மருத்து பந்தலூர் பஜாரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு நேற்று முன்தினம் இரவு 7.15 மணிக்கு பந்தலூர் அரசு மருத்துவமனையில் இருந்து இறந்தவர்களின் சடலத்தை உறவினர்கள் பெற்று சென்றனர். நேற்று காலை பந்தலூர் தாசில்தார் மகேஷ்வரி சம்பவ இடத்திற்கு சென்று அரசின் இழப்பீடு தொகையாக இருவருக்கும் ரூ.8 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி சம்பவ இடத்திற்கு சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி மாவட்ட தி.மு.க. சார்பில் நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து  தேவாலா டி.எஸ்பி. மற்றும் சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேல் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இறுதி சடங்கு நடந்தது.

இதில் தோட்டத்தொழிலாளர்கள், பொதுமக்கள், அனைத்து கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். தி.மு.க. மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள், தொழிற்சங்க பிரதநிதிகள், உள்ளாட்சி உறுப்பினர்கள் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

Tags : funeral ,elephant attack ,
× RELATED இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி...