தேக்கடி ஆதிவாசி காலனிக்கு காட்டுவழிச்சாலை அமைக்க வனத்துறையினர் அனுமதி

பாலக்காடு, டிச.16: பரம்பிக்குளம் தேக்கடியிலிருந்து செம்ணாம்பதி காட்டு வழிச்சாலை அமைத்து கோரி ஆதிவாசி மக்கள் பலமுறை அரசு அதிகாரிகளிடமும்,  எம்.எல்.ஏ. விடமும், வனத்துறையினரிடமும் கோரிக்கை வைத்து பல போராட்டங்கள் நடத்தினர். தற்போது கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுத்த உயர் அதிகாரிகள், ஆய்வுக்குப்பின் தேக்கடி-செம்ணாம்பதி-தேக்கடி காட்டு வழிச்சாலை அமைப்பதற்கு வனத்துறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை தேக்கடி-செம்ணாம்பதி மக்கள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வாயிலாக அமைக்க உத்தரவு முதலமடை ஊராட்சி நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டுளளது. வனத்துறை காட்டு வழிச்சாலை அமைக்க ஒரு ஹெக்டர் நிலம் வழங்கியுள்ளது. தேக்கடி முதல் செம்ணாம்பதி வரை காட்டு வழிச்சாலை அமைக்க 25 லட்சம் ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஊராட்சி நிர்வாகமும், எம்.எல்.ஏ.வும் நிதியுதவிகள் செய்வதாக ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த சாலை அமைப்புப்பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

Related Stories:

>