த.ம.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்துஆர்ப்பாட்டம்

ஈரோடு, டிச.16: கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் ஸ்டாப் அருகே தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கருப்பு சட்டை அணிந்து  நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மயில்துரையன் முன்னிலை வகித்தார்.

இதில், தேவேந்திர குலத்தான், பள்ளன், பண்ணாடி, காலாடி, குடும்பன், வாதிரியான், கடையன் ஆகிய 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என உடனடியாக மத்திய, மாநில அரசுகள் அரசாணையை வெளியிடக்கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், தொழிற்சங்க செயலாளர் குமார், இளைஞரணி செயலாளர் குமரேஷ், மகளிர் அணி செயலாளர் சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>