×

திட்டப்பணி துவக்கம்

ஊத்தங்கரை, டிச.16: ஊத்தங்கரை ஒன்றியம் பாவக்கல், மூன்றம்பட்டி, கொண்டம்பட்டி, கெங்கபிராம்பட்டி, உப்பாரப்பட்டி ஊராட்சிகளில் அங்கன்வாடி கட்டிடங்கள், சந்தை கடைகள், சுகாதார வளாகம் என ₹60 லட்சம் மதிப்பில் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஒன்றியக்குழு தலைவர் உஷாராணி குமரேசன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிடிஓ மகேஷ்குமார், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் குமரேசன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் பூபாலன், கோவிந்தன், சத்தியவாணி ராஜா, தமிழ்ச்செல்வி செல்வகுமார், திமுக மாவட்ட துணை செயலாளர் சந்திரன், நகர செயலாளர் பாபு சிவக்குமார், அவைத்தலைவர் அம்மானுல்லா, முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி, அன்பரசு, ஜெயலட்சுமி ராதாகிருஷ்ணன், அசோக், காளிதாஸ், பெருமாள், வெங்கடாசலம், சிவலிங்கம், ஜெயச்சந்திர பாண்டியன், அழகேசன், ரத்னவேல், மோகன், தணிகை குமரன், சாமிநாதன், பாண்டி, மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Project Launch ,
× RELATED கர்நாடகாவில் கிரக லட்சுமி திட்ட...