×

கலைஞர் அறக்கட்டளை சார்பில் திமுக நிர்வாகி குடும்பத்திற்கு ₹25,000 உதவித்தொகை

ஓமலூர், டிச.16: ஓமலூர் தெற்கு ஒன்றியத்தில் உள்ள தொளசம்பட்டியை சேர்ந்தவர் திமுக மூத்த முன்னோடி கண்ணதாசன். நெசவு தொழிலாளியான இவருக்கு பிரியா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன் இறந்தார்.  இதையடுத்து, அவரது குடும்ப நலநிதியாக, கலைஞர் அறக்கட்டளை மூலம் ₹25 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலையை, மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமாரன், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், ராஜ ஐயப்பன், மாவட்ட துணை செயலாளர் திருநாவுக்கரசு, ராஜேந்திரன், மாணவரணி அருண்பிரசன்னா, விவசாய அணி கருணாகரன், சம்பு சண்முகம், தொளசம்பட்டி ஊராட்சி தலைவர் சென்னிமலை, திமுக நிர்வாகிகள் வக்கீல் ரவிச்சந்திரன், சம்பத், சேட்டு, மணிகண்டன், பெரியண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : executive ,DMK ,Artist Foundation ,
× RELATED தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு கூட்டம்