×

தேசிய ஆற்றல் மாற்று தினம் எஸ்எம்ஏ பள்ளி மாணவர்கள் சாதனை

நெல்லை, டிச. 16: பாவூர்சத்திரம் அருகே அடைக்கலப்பட்டணம் எஸ்எம்ஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய ஆற்றல் மாற்று தினம் இணையதள வழியாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி முதல்வர் மகேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். அகாடமிக் இயக்குநர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு ஆற்றல் வளங்கள், ஆற்றல் பயன்பாடு, ஆற்றல் சேமிப்பு பற்றி பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று இணையதள வழியாக காணொளியாகவும், புகைப்படமாகவும் செயல் திட்டங்களை தயாரித்து வாட்ஸ் அப் வழியாகவும், இணைய வழியாகவும் பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கு பதிவு செய்தனர். 6வது வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான மாற்று எரிசக்தி ஆதாரங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள், இயற்கை வளங்களான சூரிய ஒளி, காற்று, மழை, அலைகள் மற்றும் புவி வெப்பம் மூலம் ஆற்றல் தயாரிப்பதற்கான வழித்தடங்களை கண்டறிந்து ஏராளமான செயல் திட்டங்களை பள்ளியின் இணையதள வழியாக சமர்ப்பித்தனர். இந்த செயல்திட்டங்களில் 9ம் வகுப்பு மாணவர்களின் காற்று ஆற்றல் மரம் முதல் பரிசு பெற்றது. சிறப்பாக செயல்திட்டங்களை உருவாக்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் சரளா ராமச்சந்திரன் மற்றும் அறிவியல் பாட ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


Tags :
× RELATED பள்ளிகள் திறப்பையொட்டி...