×

சிவகிரி அருகே தேர்தல் பிரசார பயண கூட்டம் திமுக ஆட்சி அமைந்ததும் செண்பகவல்லி அணை சீரமைப்பு ஏகேஎஸ் விஜயன் பேச்சு

சிவகிரி, டிச. 16: வாசுதேவநல்லூர் அருகே சேதமடைந்து காணப்படும் செண்பகவல்லி அணை தமிழகத்தில்  மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததும் முழுமையாகச்  சீரமைக்கப்படும் என சிவகிரி அருகே நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற விவசாய அணி மாநில செயலாளர் ஏகேஎஸ் விஜயன் தெரிவித்தார்.  தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தென்மலை, ராயகிரி, சிவகிரி, வாசுதேவநல்லூர் பகுதிகளில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தலைப்பில் தேர்தல் பிரசார பயண கூட்டம் நடந்தது. தலைமை வகித்த திமுக விவசாய அணி மாநில செயலாளர் ஏகேஎஸ் விஜயன் பேசுகையில், ‘‘வாசுதேவநல்லூர் அருகே சேதமடைந்து காணப்படும் செண்பகவல்லி அணை தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததும் முழுமையாகச் சீரமைக்கப்படும். இதே போல் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றித்தரப்படும்’’ என்றார்.

 கூட்டத்தில் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை, வர்த்தக அணி மாநில துணைத்தலைவர் அய்யாத்துரை பாண்டியன், தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ் குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சவுக்கை யு.எஸ்.டி. சீனிவாசன், வாசுதேவநல்லூர் ஒன்றியச் செயலாளர் பொன் முத்தையா பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர்கள் மாடசாமி, ரசூல் பாத்திமா, இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் இலத்தூர் ஆறுமுகசாமி, மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் வக்கீல் வெங்கடேசன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சிவகுமார், வக்கீல் அணி அமைப்பாளர் மருதப்பன், துணை அமைப்பாளர் பொன்ராஜ், மருத்துவ அணி மாவட்ட அமைப்பாளரும், பேரூர் செயலாளருமான டாக்டர் செண்பகவிநாயகம், இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரவணக்குமார், முத்துவேல், மாணவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மெடிக்கல் சுந்தர், மருத்துவ அணி மாவட்ட துணை அமைப்பாளர் டாக்டர் சுமதி, தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்கள் சேகர், பூமிநாதன், மனோகரன், ஒன்றிய துணைச்செயலாளர் மாரித்துரை, கட்டபொம்மன், மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் பூங்கொடி, கிருஷ்ணலீலா, உமாமகேஸ்வரி, பேரூர் செயலாளர்கள் வாசு., சரவணன், ராயகிரி கே.டி.சி குருசாமி, இளைஞர் அணி செயலாளர்கள்  கந்தவேல், விவேகானந்தன், முனீஸ்வரன், கிளைச் செயலாளர் கருத்தப்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


Tags : AKS Vijayan ,Shenbagavally Dam ,DMK ,formation ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்