சேரன்மகாதேவியில் வியாபாரிக்கு வெட்டு

வீரவநல்லூர், டிச. 16: சேரன்மகாதேவியில் பால் வியாபாரியை வெட்டிவிட்டு தப்பிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் பேச்சிகுமார் (29). பால் வியாபாரியான இவர் நேற்று மாலை வடக்கு நாலாந்தெரு ரயில்வே கேட் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அரிவாளுடன் வந்த மர்மநபர்கள் மூவர், பேச்சிகுமாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த பேச்சிகுமாரை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ராசுகுட்டி மற்றும் அவரது கூட்டாளிகளைத் தேடி வருகின்றன

Related Stories:

>