×

நாசரேத் நூலகருக்கு விருது அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்

நாசரேத், டிச. 16:  நாசரேத் கிளை நூலகர் பொன்ராதா மாவட்ட அளவில் சிறந்த நூலகராக தேர்வு பெற்றார். அவருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ விருதினை வழங்கினார் நாசரேத் கிளை நூலகத்தில் சிறப்பாக செயல்பட்டமைக்காக நாசரேத் நூலகர் பொன்ராதா மாவட்ட அளவில் நல்நூலகர் விருது தேர்வு பெற்றார்.  இதையடுத்து தூத்துக்குடியில் நடந்த விழாவில் நூலகர் பொன்ராதாவை பாராட்டி  அமைச்சர் கடம்பூர்ராஜூ நல் நூலகருக்கான விருதினை வழங்கினார். இதில் சண்முகநாதன் எம்எல்ஏ, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட நூலகர் ராம்சங்கர் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.  நல்நூலகர் விருது பெற்றுள்ள நாசரேத் நூலகர் பொன்ராதாவுக்கு  வாசகர் வட்ட நிர்வாகிகள், பொதுமக்கள்  பாராட்டு தெரிவித்துள்ளனர்.


Tags : Kadampur Raju ,Nazareth Librarian ,
× RELATED திருமலாபுரம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்