×

குரும்பூரில் முதியவரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

திருச்செந்தூர், டிச. 16: குரும்பூரில் போதையில் முதியவரை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  குரும்பூர் புனித லூசியா ஆலயத்தில் கடந்த வாரம் திருவிழா நடந்தது. சம்பவத்தன்று ஆலயத்துக்கு குடிபோதையில் சென்ற குரும்பூர் வடக்கு பரதர் தெருவை சேர்ந்த லூர்துசாமி மகன் ரீகன்(30) அங்குள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டு, ஆலயத்தில் கட்டியிருந்த  டியூப் லைட்களை உடைத்தார். இதனை தட்டி கேட்ட ஊர்த்தலைவர் அந்தோணியையும்(75) தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குரும்பூர் போலீசார் விசாரணை நடத்தி ரீகன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் ஊரில் உள்ளவர்கள் தன்னை தாக்கியதாக கூறி ரீகன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து குரும்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு