×

திருச்செந்தூர், குரும்பூர், ஆறுமுகநேரியில் நாளை மின்தடை

உடன்குடி, டிச. 16: திருச்செந்தூர், குரும்பூர், ஆறுமுகநேரி பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. திருச்செந்தூர் மின்வாரிய செயற்பொறியாளர்(பொ) பாக்கியராஜ் விடுத்துள்ள செய்தி  குறிப்பில் கூறியிருப்பவதாவது:
திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட ஆறுமுகநேரி, குரும்பூர், காயல்பட்டினம், ஆத்தூர் மற்றும் திருச்செந்தூர் உபமின் நிலையங்களில் நாளை (17ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை புன்னக்காயல், ஆத்தூர், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டணம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், திருச்செந்தூர் சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், பூச்சிக்காடு, கானம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கனி, தேமான்குளம், திருக்களுர் ஆகிய ஊர்களுக்கு மின்சாரம் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Thiruchendur ,Arumuganeri ,
× RELATED செல்போன் பேசியபடி காரை ஓட்டிய வழக்கு:...