×

அடிதடி வழக்கில் கைது செய்ததால் ஆத்திரம்காவல் நிலையத்தில் எஸ்ஐ புல்லட்டுக்கு தீ வைத்த டீக்கடைக்காரர் கைது வந்தவாசி அருகே பரபரப்பு

வந்தவாசி, டிச.16: வந்தவாசி அருகே காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த எஸ்ஐ புல்லட்டுக்கு தீ வைத்த டீக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த எட்டிதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பரந்தாமன்(65). இவரது நண்பர் மழையூர் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன்(55). இவர் மழையூர் பஜாரில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், பரந்தாமன் மகன் திருமணத்திற்கு வந்தவாசியில் உள்ள ஒரு நகைக்கடையில் நகைகளை ராமச்சந்திரன் கடனாக வாங்கி கொடுத்தாரம். அதற்கான பணத்தை பரந்தாமன் ெசலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. பலமுறை கேட்டும் பணம் கொடுக்காததால் கடந்த மாதம் 8ம் தேதி ராமச்சந்திரன் உட்பட 3 பேர் பரந்தாமன் வீட்டிற்கு சென்று தகராறு செய்தார்களாம். அப்போது, பரந்தாமனை சரமாரி தாக்கி வீட்டை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வடவணக்கம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 2ம் தேதி ராமச்சந்திரனை கைது செய்தனர். மேலும், அவரது புல்லட்டை போலீசார் பறிமுதல் செய்ததாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஜாமீனில் சிறையில் இருந்து ராமச்சந்திரன் வெளியே வந்தார். பின்னர், நேற்று அதிகாலை 5 மணியளவில் வடவணக்கம்பாடி காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர் செந்தில்குமார் என்பவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட தனது புல்லட்டை திரும்ப தரும்படி கேட்டுள்ளார். அதற்கு போலீஸ்காரர், காலையில் எஸ்ஐயிடம் வந்து பேசிக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார். அதனை ஏற்க மறுத்த ராமச்சந்திரன், செந்தில்குமாரிடம் தகராறு ெசய்து அவரை தாக்கியதுடன், அருகில் இருந்த எஸ்ஐ சம்பத்திற்கு சொந்தமான புல்லட்டை தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. போலீஸ்காரர் செந்தில்குமார் உடனடியாக புல்லட்டில் ஏற்பட்ட தீயை அணைத்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த எஸ்பி அரவிந்த் நேற்று போலீஸ் நிலையத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும், எஸ்ஐ செந்தில்குமார் கொடுத்த புகாரின்பேரில் வடவணக்கம்பாடி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப்பதிந்தார். ெதாடர்ந்து, டிஎஸ்பி பி.தங்கராமன் தலைமையிலான போலீசார் ராமச்சந்திரனை கைது செய்தனர். பின்னர், அவரை வந்தவாசி நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தினர். 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ராமச்சந்திரன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : tea shop owner ,police station ,riot ,Vandavasi ,
× RELATED திருப்போரூர் காவல் நிலையத்தில் மின்மாற்றியில் தென்னை ஓலை உரசி தீ விபத்து