×

வீட்டுக்குள் புகுந்த கரடியை விரட்டியடித்த வளர்ப்பு நாய்

கோத்தகிரி: கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடி வீட்டிற்குள் நுழைய முற்பட்ட போது வளர்ப்பு நாய் அதனை விரட்டியடித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மை காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகள்,தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சாலை ஓரங்களில் கரடிகள் உலா வருவது வாடிக்கையாகியுள்ளது. இந்நிலையில் கோத்தகிரியில் தனியார் குடியிருப்பு பகுதியில் கரடி ஒன்று உணவு தேடி உலா வந்தது. அந்த கரடி வீட்டின் வளாகத்திற்குள் நுழைந்தவுடன் வீட்டில் வளர்க்கும் நாய், கரடியை விரட்டியடித்தது. நாய்க்கு பயந்து கரடி அங்கும் இங்கும் குதித்து ஓடும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது இக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி திரியும் கரடியை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kotagiri ,Nilgiris ,
× RELATED 2000 ஆண்டுகால சண்டை இது; விட்டுக்கொடுக்க...