×

கருமந்துறையில் மலைவாழ் கிராம மக்களிடம் திமுக எம்பிக்கள் குறைகேட்பு

ஆத்தூர், டிச.15: ஆத்தூர் மற்றும் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள தெற்கு நாடு, வடக்கு நாடு, கீழ்நாடு, மேல்நாடு ஊராட்சிகளில், திமுக எம்பிக்கள் பார்த்திபன், கௌதமசிகாமணி ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் கருமந்துறையில் மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில் நடந்தது.  கூட்டத்தில் கருமந்துறை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், மலை கிராம மக்கள் நிலங்களுக்கு பட்டா கிடைப்பதில் உள்ள இடையூறுகளை நிவர்த்தி செய்து தர வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை நிறுவன வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளை உள்ளூர் மலைவாழ் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தை இரண்டாக பிரிந்து கருமந்துறையை தலைமையிடமாக கொண்டு மலைவாழ் மக்கள் ஊராட்சி ஒன்றியமாக மாற்றி மலை கிராம மக்களின் முன்னேற்றத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய திமுக செயலாளர் முருகேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீரபாண்டி டாக்டர் பிரபு, சேலம் ஆறுமுகம், தும்பல் கணேசன், ரேவதிமகேந்திரன், ஜெயவீரன், சிவராமன், பெத்தநாயக்கன்பாளையம் வெங்கடேசன், அப்துல்முத்தலிப்பு வெங்கடேசன்,  பரமேஸ்வரன், அங்கமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : MPs ,DMK ,hill villagers ,Karumanthurai ,
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...