×

20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு கிராம நிர்வாக அலுவலகம் முன் பாமகவினர் ஆர்ப்பாட்டம்

ஓமலூர், டிச.15: வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி, வன்னியர் சங்கம், பாமக சார்பில் விஏஓக்களிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. ஓமலூரில் நடந்த போராட்டத்திற்கு நகர செயலாளர் சாய்சுஜன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் டாக்டர் மாணிக்கம், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் முருகன், நகர வன்னியர் தலைவர் ஜில்லு கார்த்தி, வக்கில் விஜயராகவன் பரமேஸ்வரி, பரணி லதா, காந்தி, சடையப்பன் உட்பட பலர், கிராம நிர்வாக அலுவலரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.   இடைப்பாடி: இடைப்பாடி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பாமக இளைஞரணி மாநில துணைத் தலைவர் ரவி தலைமை வகித்தார். நகர தலைவர் வடிவேலு, ஏழுமலை, மூர்த்தி, வைத்தி, ஜெயகுமார், மணிமாறன், குமரவேலு, விஜய், சிவசுப்பிரமணியன், தங்கவேல் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனுவை கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்கினர். வெள்ளாண்டி வலசு விஏஓ அலுவலகத்தில் வன்னியர் சங்க மாவட்ட தலைவர் குழந்தை கவுண்டர், பாமக மாநில பொதுக்குழு உறுப்பினர் குமாரசாமி ஆகியோர் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

இளம்பிள்ளை: சேலம் தெற்கு மாவட்ட பாமக செயலாளர் அண்ணாதுரை தலைமையில், இடங்கணசாலை விஏஓவிடம் மனு அளிக்க 500க்கும் மேற்பட்டோர் கோஷங்கள் முழங்க வந்து மனு கொடுத்தனர். அப்போது இடங்கணசாலை பேரூர் செயலாளர் மாதேஷ், தன்ராஜ், வடிவேல், மாரிமுத்து, ராஜா, பச்சியண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், வீரபாண்டி ஒன்றியம் கல்பாரப்பட்டி விஏஓவிடம் வீரபாண்டி ஒன்றிய கவுன்சிலர் மணிவண்ணன் தலைமையில், முன்னாள் கவுன்சிலர் செல்வம் மற்றும் துரைராஜ், பாலமுருகன் முன்னிலையிலும், இளம்பிள்ளையில் வீரபாண்டி ஒன்றிய வன்னியர் சங்க தலைவர் சீரங்கன் தலைமையிலும், மகுடஞ்சாவடி ஒன்றியம் அ.புதூர் விஏஓவிடம் ஒன்றிய முன்னாள் செயலாளர் மாதையன், மாநில மாணவர் அணி துணை செயலாளர் பாஸ்கரன், பசுமை தாயக செயலாளர் பச்சமுத்து முன்னிலையிலும் மனு கொடுக்கப்பட்டது. தாரமங்கலம்: தாரமங்கலம் விஏஓவிடம், முன்னாள் எம்எல்ஏ கண்ணன் ஜானகி தலைமையில் தனபால், ஜெயக்குமார், சுந்தரம் ஆகியோர் மனு அளித்தனர். அமரகுந்தியில் ஒன்றிய குழு தலைவர் சுமதிபாபு, ஆரூர்பட்டியில் பாபு தலைமையிலும், மானத்தாள் கிராமத்தில் பூபதி தலைமையிலும், மல்லிக்குட்டையில் நித்யா தனசேகரன் தலைமையிலும் மனு அளித்தனர்.

வாழப்பாடி: மாநில துணைப் பொதுச் செயலாளர் குணசேகரன் தலைமையில் வாழப்பாடியில் விஏஓ அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் முருகேசன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் மனுக்களை வழங்கினர். சின்னமநாயக்கன்பாளையம் பசுமைத்தாயகம் மாநில துணை பொது செயலாளர் வெங்கடாசலம் தலைமையில், மாட்டுவண்டியில் பேரணியாக சென்று ஏர் கலப்பை, நெல் கதிர், கரும்பு, பருத்தி, வாழை, விவசாயிகள் பேரணியாக சென்று மனுக்களை வழங்கினர். பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், பெரியகிருஷ்ணாபுரத்தில் ஒன்றிய செயலாளர் சடையப்பன் தலைமையிலும் மனு அளிக்கப்பட்டது.


Tags : Demonstrators ,village ,administration office ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...