×

மாவட்டம் முழுவதும் கம்யூனிஸ்ட், தனியார் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், டிச.15: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாவை திரும்பபெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்ட திருத்ததை திரும்ப பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த போராட்டத்துக்கு ஆதரவாகவும், தனியார் நிறுவன பொருட்களை தமிழகத்தில் வாங்க கூடாது என வலியுறுத்தி, நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள ரிலையன்ஸ் கம்யுனிகேஷன் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட பிரதேச குழு உறுப்பினர் ஜெயமணி தலைமை வகித்தார்.இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டு கோரிக்கையை விளக்கி கோஷம் எழுப்பினார்கள்.பள்ளிபாளையம்:  வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பள்ளிபாளையத்தில் பெயிண்டர்கள் மற்றும் ஓவிய கலைஞர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பள்ளிபாளையம் பஸ் ஸ்டாண்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மணிகண்டன் தலைமை தாங்கி பேசினார். சங்க நிர்வாகிகள் பாஸ்கர், பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோகன், திராவிடர்விடுதலை கழகம் முத்துபாண்டி, தமிழ்புலிகள் கட்சி நிர்வாகி அழகேசன் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சி:பள்ளிபாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே ஜியோ சிம் விற்பனை நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய குழு உறுப்பினர் முத்துகுமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோகன், மாவட்ட குழு உறுப்பினர் மோகன், ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோஷமிட்டனர். நாம் தமிழர் கட்சி: குமாரபாளையத்தில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் நடராஜன், சுரேஷ், கதிர்வேல், வருண்சுப்பிரமணியம், ஓமலூர் நல்லான், மோகன்தாஸ் உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மொத்தம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதான 500க்கும் மேற்பட்டோர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.ராசிபுரம்: மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் முன்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலர் பழ.மணிமாறன் தலைமை வகித்தார். ஒன்றியச்செயலர் ராமசாமி வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் அரசன், நாமக்கல் தொகுதி செயலர் ஆற்றலரசு, தொகுதி இணைச்செயலர் மாதேஸ்வரன், வைகறை செல்வன், கபிலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருச்செங்கோடு:  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்காக ஆதரவாக பெரிய மணலியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் தேவராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் ரமேஷ் சக்திவேல் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மல்லசமுத்திரம் கீழ்முகம் கிராமத்தில் விஏஓ அமுதாவிடம் மல்லசமுத்திரம் பேரூர் செயலாளர் சங்கர், தலைவர் பாபு, நாமக்கல் மேற்கு மாவட்ட துணை தலைவர் சரவணன் ஆகியோர் மனு அளித்தனர். முன்னதாக ஊர்வலமாக வந்தனர்.



Tags : Demonstrations ,organizations ,district ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்