×

20 சதவீத இடஒதுக்கீடு கோரி விஏஓ அலுவலகங்களில் பாமகவினர் மனு அளிப்பு

நாமக்கல், டிச.15: வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி, நேற்று நாமக்கல் கிராம நிர்வாக அலுவலர் பழனிசாமியிடம், பாமக துணை பொதுச்செயலாளர் தினேஷ்பாண்டியன் தலைமையில் பாமகவினர் மனு கொடுத்தனர். முன்னதாக அவர்கள், கிராம நிர்வாக அலுவலகம் முன்பு வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி திடீர் கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் நகர செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பள்ளிபாளையம், டிச.15: வன்னியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி, பள்ளிபாளையம் அக்ரஹார கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு வழங்கி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இளைஞர் சங்க மாநில துணைத்தலைவர் உமா சங்கர் தலைமையில் பாமகவினர் கோஷமிட்டனர். பின்னர் கிராம நிர்வாக அதிகாரியிடம் மனு கொடுத்தனர். நகர நிர்வாகிகள் உதயகுமார், செந்தில்நாதன், கராத்தேசேகர், பழனிசாமி, சின்னதுரை, ராஜசேகர், மணி, சண்முகம், காளிதாஸ், ராஜேந்திரன், ஆட்டோ சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ராசிபுரம்: ராசிபுரம் பகுதியில் வன்னியர் சங்கம் சார்பில் பாமகவினர் 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு கிராம நிர்வாக அலுவலத்தில் மனு அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட பாமக செயலாளர் மோகன்ராஜூ தலைமையில் மனு அளிக்கப்பட்டது. ராசிபுரம் ஒன்றிய பொறுப்பாளர்கள் மணிராஜ், மணிகண்டன், நகர பொறுப்பாளர் காமராஜ், காட்டூர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : offices ,VAO ,
× RELATED அரசு பள்ளி கட்டிடங்களில் செயல்படும்...