நாமக்கல், பள்ளிபாளையத்தில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற தமிழ்புலிகள் கட்சியினர் கைது

நாமக்கல், டிச.15: நாமக்கல், பள்ளிபாளையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழ்புலிகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசின் 3 வேளாண்சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி நாமக்கல் ரயில்வே நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடபோவதாக தமிழ்புலிகள் கட்சியினர் அறிவித்திருந்தனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாவட்ட துணைச்செயலாளர் சிவா உள்பட 19 அக்கட்சியினர் 19 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். பள்ளிபாளையம்: தமிழ்புலிகள் அமைப்பினர் காவேரி ரயில் நிலையத்தில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில் மறியல் செய்ய முயன்றவர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர். மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், மாவட்ட இளம்புலிகள் அமைப்பின் செயலாளர் பிரவின்கார்த்தி உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.

Related Stories: