×

அதிமுக மீண்டும் ஒன்றிணைந்தால் 2026 தேர்தலில் வெற்றி நிச்சயம்: சசிகலா அழைப்பு!

 

சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுகவாக போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என்று வி.கே.சசிகலா கருத்து தெரிவித்துள்ளார். அதிமுகவை ஒன்றிணைத்து 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என வி.கே. சசிகலா வலியுறுத்தியுள்ளார்.

“ஒன்றுபட்ட வலிமைமிக்க அதிமுகவை தமிழக மக்களும், தொண்டர்களும், கூட்டணிக் கட்சிகளும் விரும்புகின்றனர். அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால், 2026ல் வெற்றி நிச்சயம். மேலும்,அதிமுக ஆட்சி மீண்டும் மலர அனைவரும் கைகோர்க்க வேண்டும், ஆட்சியமைக்க ஒன்றுபட்ட, வலிமையான அதிமுகதான் ஒரே தீர்வு, ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும், ஆடுகள் மோதிக்கொள்ளட்டும் என இரத்தம் குடிக்கும் ஓநாய்கள் காத்துக்கிடக்கின்றன.

அதிமுக ஒன்றிணைந்து 2026-தேர்தலை சந்தித்தால் அசுர பலத்துடன் வெற்றி பெறும், அதிமுகவின் முன்னோடிகள் முதல் கடைக்கோடி தொண்டர்கள் வரை சிந்திக்க வேண்டும்” என்தெரிவித்தார். சசிகலாவின் இந்த கருத்துக்கள், அதிமுகவில் ஒற்றுமையை ஏற்படுத்தி, கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு அவரது முயற்சிகளை பிரதிபலிக்கின்றன.

Tags : 2026 election ,Sasikala ,Chennai ,V. K. Sasikala ,VV ,Supreme Court ,2026 legislative elections ,K. Sasikala ,United ,
× RELATED இந்தியாவிலேயே அதிகபட்சமாக...