×

பாஸ்டேக் முறைகேட்டை கண்டித்து தொப்பூர் சுங்கச்சாவடியில் வி.சி.க.,வினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, டிச.15: தர்மபுரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்,  பாஸ்டேக் என்ற பெயரில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் சுங்கச்சாவடிகளை அப்புறப்படுத்த கோரி, தொப்பூர் டோல்கேட் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட துணை செயலாளர் மின்னல்சக்தி தலைமை வகித்தார். ஜெயந்தி, மன்னன், சமத்துவன், தகடூர் தமிழ்ச்செல்வன், கோவேந்தன், ஜானகிராமன், சாக்கன்சர்மா, அதியமான், பாரதிராஜா, சந்தனமூர்த்தி, சுரேஷ், அம்பேத்வளவன், சங்கர், விடுதலை மதி, கப்பல் செந்தில், பார்த்தீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தகடூர் தமிழ்செல்வன், கோவேந்தன் ஆகியோர் கூறுகையில், ‘தொப்பூரில் உள்ள இந்த டோல்கேட்டில் நுழையும்போது, பாஸ்டேக் திட்டத்தில் பணம் குறைவாக இருந்தால், இரண்டு மடங்கு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. பின்தங்கிய மாவட்டமான தர்மபுரிக்கு கட்டுமான பொருட்களான ஜல்லி, சிமெண்ட், கம்பி, மணல் போன்றவற்றை ஏற்றி வரும் லாரி மற்றும் கனரக வாகனங்களுக்கு அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதனால், கட்டுமான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்க, கலெக்டர் மற்றும் அதிகாரிகள் நேரில் விசாரணை செய்து கட்டண வசூலை சீர்செய்ய வேண்டும்,’ என்றனர். போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 16 பெண்கள் உள்பட 74 பேரை, தொப்பூர் போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Tags : VCK ,protests ,toll plaza ,
× RELATED பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு...