×

மதுபான கடையை அகற்ற கோரிய மனுவை முடித்துவைத்தது ஐகோர்ட் கிளை..!!

மதுரை: ராமநாதபுரம் நாடார்வலசையில் மாணவர்களுக்கு இடையூறாக உள்ள மதுபான கடைகளை அகற்ற கோரி, தொண்டியை சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி மதுபான கடைகள் மூடப்பட்டுவிட்டதாக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அரசு தரப்பு அறிக்கையை பதிவு செய்து கொண்ட ஐகோர்ட் கிளை வழக்கை முடித்து வைத்தது.

Tags : iCourt ,Madurai ,Thondi Kalandar Asik ,Court ,Ramanathapuram Nadarvalasa ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...