×

ஆலமரத்தில் பற்றி எரிந்த தீ நத்தம் அருகே பரபரப்பு

நத்தம், ஆக. 30: நத்தம் அருகே பாலப்பநாயக்கன்பட்டியில் இருந்து பண்ணுவார்பட்டி செல்லும் சாலையில் உள்ள ஒரு ஆலமரத்து அடியில் பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு விசேஷ காலங்களில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபாடு செய்து வழக்கம். இந்நிலையில் நேற்று காலை அந்த ஆலமரத்தில் தேன் கூடு கட்டியிருப்பதை அப்பகுதி இளைஞர்கள் கண்டனர். தொடர்ந்து இளைஞர்கள், அந்த தேன் கூட்டை கலைப்பதற்காக தீ வைத்தனர்.

அப்போது காற்று பலமாக வீசியதால் ஆலமரத்தில் தீபற்றி மளமளவென எரிய துவங்கியது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் உடனே இதுகுறித்து நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் ஒன்றரை மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags : Natham ,Pillaiyar ,Palappanayakkanpatti ,Pannuvarpatti ,
× RELATED ஓய்வூதியர் தின விழா