×

போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனை

திண்டுக்கல், ஆக. 30: ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ராமர் (60). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2022ம் ஆண்டு பள்ளி செல்லும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து ராமரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சத்யதாரா நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கினார். இதில் ராமருக்கு ஆயுள் தண்டனை, ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

 

Tags : POCSO ,Dindigul ,Ramar ,Ottanchathram ,Ottanchathram All Women Police Station police ,
× RELATED ஓய்வூதியர் தின விழா