×

கொரடாச்சேரியில் இன்று நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

திருவாரூர், ஆக.30: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் இன்று நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் மோகனச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்’ இன்று (30ம் தேதி) நடைபெறுகிறது.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் நடைபெறும் இந்த முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறு மற்றும் பெண்கள் நலம், குழந்தைகள் நலம், இருதய நோய் பிரிவு, மூளை நோய் பிரிவு ,தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம் மற்றும் காது மூக்கு தொண்டை,மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், கதிரியக்கவியல், நுரையீரல் பிரிவு, சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளிக்கின்றனர்.

மேலும் இந்த சிகிச்சையின்போது ரத்த பரிசோதனை, சளி பரிசோதனை, இசிஜி, எக்கோ , அல்ட்ரா சோனோகிராம் உள்ளிட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 

Tags : Stalin ,Koratacherry ,Thiruvarur ,Collector ,Mohanachandran ,Koratacherry, Tiruvarur district ,District ,Koratacherry Government Girls Higher Secondary… ,
× RELATED ஓய்வூதியர் தின விழா