வாசுதேவநல்லூரில் பைக் விபத்தில் காயமடைந்தவர் பரிதாப சாவு

சிவகிரி, டிச. 15: வாசுதேவநல்லூர் அருகே உள்ள வெள்ளானைக்கோட்டை சண்முகவேல் தேவர் தெருவைச் சேர்ந்தவர் ராமராஜ் மகன் விஜய் (17). இவர், கடந்த 11ம் தேதி தனது நண்பர் வாசுதேவநல்லூர் அக்ரஹார தெருவைச் சேர்ந்த ஆறுமுகச்சாமி மகன் புருஷோத்தமன் (21) என்பவருடன் பைக்கில் சென்றுள்ளார். புருஷோத்தமன் பைக்கை ஓட்டிச் சென்றுள்ளார். தென்காசி- மதுரை ரோட்டில் செண்பகக்கால் ஓடைத்தெருவில் பைக் செல்லும்போது குறுக்கே ஒருவர் வரவே, புருஷோத்தமன் பைக் பிரேக் பிடித்துள்ளார். அப்போது புருஷோத்தமன், பின்னால் இருந்த விஜய் ஆகிய இருவரும் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இருவரும் புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு விஜய் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி விஜய் நேற்று பரிதாபமாக இறந்தார்.

Related Stories:

>