×

ரஷ்யாவுக்கு ஆதரவாக கச்சா எண்ணெய் பணமோசடி மையமாக இந்தியா மாறி வருகிறது: அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் விமர்சனம்

நியூயார்க்: ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா கச்சா எண்ணெய் பணமோசடி மையமாக மாறி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோ குற்றம்சாட்டியுள்ளார். வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகரான பீட்டர் நவரோ தனது சமூக ஊடக பதிவில் கூறுகையில்,‘‘இந்தியா அமெரிக்க டாலரை பயன்படுத்தி ரஷ்யாவிடம் சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்குகின்றது. அதனை பதப்படுத்துகிறது. பின்னர் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிற்கு எரிபொருட்களை ஏற்றுமதி செய்கிறார்கள்.

இந்தியா இப்போது ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பீப்பாய்களுக்கும் மேல் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியத்தை ஏற்றுமதி செய்கிறது. இதுஇறக்குமதி செய்யும் ரஷ்ய கச்சா எண்ணெயில் பாதிக்கும் மேலானது. உக்ரைனுடன் போர் தொடங்காத நிலையில் இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து தனது நாட்டின் தேவையில் ஒரு சதவீதம் கச்சா எண்ணெய்யை வாங்கியது. ஆனால் இன்று அது 30 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.

இந்த அதிகரிப்பு உள்நாட்டின் தேவையை பொறுத்ததாக இல்லை. இந்தியாவின் லாப நோக்கத்தில் நடத்தப்படுகின்றது. ரஷ்யாவுக்கு ஆதரவாக பெரிய அளவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மையமாகவும், கச்சா எண்ணெய் பணமோசடி மையமாகவும் இந்தியா மாறி உள்ளது. இந்தியா ரஷ்யாவுக்கு கச்சா எண்ணெய் மூலமாக நிதியுதவி செய்கிறது. இது அமெரிக்க ஏற்றுமதியாளர்களை பாதிக்கிறது. இந்தியா மூலமாக கிடைக்கும் டாலரை வைத்து உக்ரைனில் ரஷ்யா போர் மூலமாக கொலை செய்கிறது. இதற்கு இந்தியா உதவுகின்றது.

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து ஆயுதங்களை வாங்குகின்றது. இந்தியா இதனை மாற்ற வேண்டும். அமெரிக்க நிறுவனங்கள் உணர்திறன் வாய்ந்த ராணுவ தொழில்நுட்பங்களை மாற்றவும், இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை அமைக்கவும் கோரியது. ஆனால் இந்தியா இதனை ஏற்கவில்லை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா அமெரிக்காவின் மூலோபாய பங்காளியாக கருதப்பட விரும்பினால் அதுபோன்று செயல்படவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார் .

Tags : India ,Russia ,President Trump ,New York ,US ,Peter Navarro ,White House ,US… ,
× RELATED பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா,...