மாப்பிள்ளையூரணி குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

தூத்துக்குடி, டிச. 15: தூத்துக்குடி சவேரியார்புரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மாப்பிள்ளையூரணி பகுதி குளத்தில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.  தூத்துக்குடி சவேரியார்புரத்தை சேர்ந்தவர் மரியபாக்கிய சவரிமுத்து மகன் ஜோஸ்வா (22). சென்னையில் எம்சிஏ இறுதி ஆண்டு படித்து வந்தார். நேற்று  நண்பர்களுடன் மாப்பிள்ளையூரணி பகுதி குளத்திற்கு சென்று குளித்துகொண்டிருந்தார். இதில் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்ற அவர் திடீரென தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி ஜோஸ்வாவின் உடலை மீட்டனர்.  புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் மில்லர்புரத்தைச் சேர்ந்த வாலிபர் அன்புராஜ் என்பவர் நேற்று முன் தினம் மூழ்கி பலியான நிலையில் மாப்பிள்ளையூரணி குளத்தில் கல்லூரி மாணவர் நேற்று உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களிடையே தீராத சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>