தோட்டக்கலை சாகுபடியில் ஈடுபடும் 10 சிறந்த விவசாயிகளுக்கு விருது துணை இயக்குனர் தகவல்

திருவண்ணாமலை, டிச.15: திருவண்ணாமலை மாவட்டத்தில், தோட்டக்கலை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் 10 பேருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. இதுகுறித்து, திருவண்ணாமலை தோட்டக்கலை துணை இயக்குநர் சிதம்பரம் தெரிவித்திருப்பதாவது: தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க, மாவட்ட மற்றும் வட்டார அளவில் தலா 10 பேருக்கு சிறந்த விவசாயி விருது வழங்கப்படுகிறது. காய்கறிகள், பழங்கள், மலர்கள், வாசனை திரவியங்கள், மலைப்பயிர்கள் நறுமண பயிர்கள், மருத்துவ பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 6 விருதுகளும், நுண்ணீர் பாசன தொழில்நுட்டம், மேம்படுத்தப்பட்ட பயிர் சாகுபடி தொழில் நுட்பம், கரிம பண்ணையம், இயற்கை பண்ணையம் போன்ற நவீன சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 4 விருதுகள் வழங்கப்படும்.

வட்டார அளவில் விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள், tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ெசய்து, தோட்டக்கலை உதவி இயக்குநர் பெயரில் ₹500க்கு வங்கி வரைவோலை இணைத்து, தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவகத்தில் நேரில் அல்லது அஞ்சலில் இன்று மாலைக்குள் அனுப்ப வேண்டும். சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வயல்களை வல்லுநர் குழு ஆய்வு செய்து, தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு அரசு விழாவில் விருது வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>