×

நாடு முழுவதும் வாக்கு திருட்டு: பிரேமலதா பரபரப்பு பேட்டி

நெல்லை: நாடு முழுவதும் வாக்கு திருட்டு நடைபெறுவதாக நெல்லையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறினார். நெல்லையில் இன்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நாடு முழுவதும் வாக்கு திருட்டு நடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தில் வாக்கு திருட்டு நடப்பது இப்போதுதான் தெரிய வந்துள்ளது. தேர்தலிலும் துஷ்பிரயோகம் நடக்கிறது. தேர்தல் ஆணையமும் நீதியரசர்களும் இணைந்து ஜனநாயக நாட்டில் முறையான தேர்தலை நடத்த வேண்டும். அப்போதுதான் தேர்தலில் நிற்பதற்கும், தேர்தலில் போட்டியிடுவதற்கும் வழிவகை கிடைக்கும்.

கண்கூடாக வாக்குக்கு காசு கொடுப்பது தெரிகிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பீகார் மட்டுமல்ல இந்தியா முழுவதும் சீர்திருத்தம் வரவேண்டும். சட்டமன்றத் தேர்தல் நடத்துவதற்கு 9 மாதம் உள்ளது. கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். விஜய் குறித்தும் கூட்டணி குறித்தும் இனி என்னிடம் எந்த கேள்வியும் கேட்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Premalatha ,Demutika ,General Secretary ,Election Commission ,
× RELATED 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு...