சிறுமியை கடத்தி திருமணம்: போலீஸ்காரர் மகன் போக்சோவில் கைது

பெரம்பூர்: பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் திவாகர் (37). இவர், திருவிக நகர் காவல் நிலையத்தில் கடந்த 9ம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘‘தனியார் கல்லூரியில் படித்து வந்த தனது 17 வயது மகள் காணவில்லை,’’ என தெரிவித்து இருந்தார். விசாரணையில், பெரம்பூர் செம்பியம் போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் தலைமை காவலரின் மகன் குமரவேல் (19), மாணவியை காதலித்து, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, திருப்பதிக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.  இதனையடுத்து போலீசார், திருப்பதி சென்று சிறுமி மற்றும் குமரவேல் ஆகிய இருவரையும் மீட்டனர். பின்னர், போக்சோ சட்டத்தில்  குமரவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>