×

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

சாத்தூர், டிச. 15:  சாத்தூர் அருகேயுள்ளது இருக்கன்குடி மாரியம்மன் கோயில், இங்கு நேற்று கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக அதிகாலை முதல் கணபதி ஹோமம், லலிதா சகஸ்ரநாம பாராயணம், துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி, மாரியம்மன் ஹோமங்கள் நடந்தன. பின்னர் 1008 சங்குகளில் உள்ள தீர்த்தத்தால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோயில் அணையர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் ராமமூர்த்தி, சவுந்திரராஜன், ராஜேந்திரன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
சுகாதார கல்வி விழிப்புணர்வு முகாம்

Tags : 1008 Sangabhishekam ,Irukkankudi Mariamman Temple ,
× RELATED வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில் 1008 சங்காபிஷேகம்