×

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா ஆண்டுப் பெருவிழா: போக்குவரத்து மாற்றம்

சென்னை: பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா ஆண்டுப் பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து காவல் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா ஆண்டுப் பெருவிழா 2025, வருகின்ற 29.08.2025 வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி 08.09.2025 தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது. கூட்ட நெரிசலைப் பொறுத்து, தேவைபட்டால், போக்குவரத்து மாற்றம் பின்வரும் தேதிகளில் 29.08.2025, 31.08.2025, 01.09.2025, 07.09.2025, 08.09.2025 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்படும்.

அடையார் உட்கோட்ட மாற்று வழிகள்:-

*திரு.வி.க.பாலத்திலிருந்து பெசன்ட் அவென்யு சாலை வழியாக பெசன்ட் நகர் பேருந்து நிலையம் நோக்கி செல்லும் வாகனங்கள் ஆவின் பூங்காவில் இருந்து தடை விதிக்கப்பட்டு, அதற்கு பதிலாக எல்.பி.சாலை வழியாக செல்ல அனுமதி அளிக்கப்பட்டும்.

*7th அவென்யு மற்றும் எம்.ஜி.சாலை சந்திப்பிலிருந்து அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.

*எம்.எல். பூங்காவிலிருந்து பெசன்ட் அவென்யூ வழியாக பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தை நோக்கிச் செல்லும் மாநகர பேருந்துகள் தடைசெய்யப்பட்டுள்ளன. மேலும், எல்.பி. சாலை இடதுபக்கம் திரும்பி சாஸ்திரி நகர் 1வது அவென்யூ வழியாக வலது பக்கம் திரும்பி சாஸ்திரி நகர் 1வது பிரதான சாலையில் இடதுபக்கம் திரும்பி எம்.ஜி. சாலை வழியாக இடதுபக்கம் திரும்பி பெசன்ட் நகர் 1வது பிரதான சாலை வழியாக பேருந்து நிலையத்தை அடையலாம்.

*பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திலிருந்து திருவான்மியூர் மற்றும் அடையாறு சிக்னல் நோக்கி செல்லும் மாநகர பேருந்துகள் பெசன்ட் நகர் 1வது அவென்யு, சாஸ்திரி நகர் 1வது அவென்யு வழியாகத் திருப்பிவிடப்பட்டு, பின்னர் இடது புறம் சாஸ்திரி நகர் 1″ மெயின் ரோடு வழியாக சென்று, பின்னர் வலதுபுறம் திரும்பி எம்.ஜி.சாலை வழியாக எல்.பி.சாலையை அடைந்து தங்கள் இலக்கை அடைய வேண்டும்.பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags : Besant Nagar ,Annai Velankanni ,Tiruttala ,Golden Jubilee Anniversary ,Chennai ,Besant ,Nagar ,Annai ,Velankanni ,Golden Jubilee ,Traffic Police ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...