×

சத்திரக்குடி பகுதியில் குடிநீருக்காக நாள் முழுவதும் குடத்துடன் காத்திருக்கும் அவலம்

பரமக்குடி, டிச.15: பரமக்குடி தாலுகா சத்திரக்குடியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மாதத்திற்கு சில நாட்கள் மட்டுமே காவிரி கூட்டுக் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் உள்ள கிணற்று நீர் ஆழ்துளை பம்புகளின் தண்ணீர் உவர் நீராக உள்ளதால், காவிரி கூட்டு குடிநீர் மட்டுமே குடிநீருக்கு ஆதாரமாக உள்ளது. மாதத்திற்கு சில நாட்கள் மட்டுமே தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதால், பெண்கள் காலி குடங்களுடன் நாள் முழுவதும் காத்துக்கிடக்கின்றன. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், குடிநீர் சேகரிக்க குழந்தைகளுடன் பெண்கள் கூட்டமாக வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.

ஊரடங்கு காலத்தில், காவிரி குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்தி, பொதுமக்களிடம் சமூக நிலைகளை கடைபிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுகுறித்து கிராமமக்கள் கூறியது: சத்திரக்குடி பகுதியில் உள்ள கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் சேதம் அடைந்து பல லிட்டர் தண்ணீர் வீணாகி வருவதால் போதுமான குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். மாதத்தில் சில நாட்களே வரும் தண்ணீரை போட்டி போட்டு பிடிப்பதால், பெண்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. எனவே, கிராமத்திற்கு காவிரி தண்ணீர் முறையாக வழங்கவும், தண்ணீர் பற்றாக்குறையை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு