அருப்புக்கோட்டை, ஆக.29: அருப்புக்கோட்டை புதிய ஆர்டிஓ நேற்று பொறுப்பேற்றார். அருப்புக்கோட்டை ஆர்டிஓவாக பணிபுரிந்து வந்த வள்ளிக்கண்ணு கடந்த 6 மாதத்திற்கு முன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து புதிய ஆர்டிஓ நியமனம் செய்யப்படாமல் பொறுப்பு ஆர்டிஓ மட்டுமே நியமனம் செய்யப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலராக பணிபுரிந்த மாரிமுத்து அருப்புக்கோட்டை ஆர்டிஓவாக நியமிக்கப்பட்டார். அருப்புக்கோட்டை ஆர்டிஓவாக நியமனம் செய்யப்பட்ட மாரிமுத்து நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு தாசில்தார்கள், ஆர்டிஓ அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
