×

கட்டிட தொழிலாளி தவறி விழுந்து சாவு

மதுரை, ஆக. 29: மதுரை, சிம்மக்கல் காமாட்சி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சரவணக்குமார் (55). இவர் சென்ட்ரிங் கம்பி கட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கட்டிடம் ஒன்றில் முதல் மாடியில் இவர் கம்பி கட்டும் வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் தூக்கிப்பார்த்தபோது, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவரது வேலைகளின் ஒப்பந்ததாரர் அளித்த புகாரின் பேரில், கீரைத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Madurai ,Saravanakumar ,Simmakkal Kamatchi Amman Koil Street, Madurai ,Anupanadi Housing Board ,
× RELATED ஓய்வூதியர் தின விழா